என் மலர்
இந்தியா

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி, ஊழல்களை திமுக மூடி மறைக்க பார்க்கிறது - அமித்ஷா
- தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென் மாநில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.
- மத்திய அரசு அனைத்து மொழிகளையும் ஒன்றாகத் தான் பார்க்கிறது.
டெல்லியில் சிஎன்என் நியூஸ் 18 நடத்திய 'ரைசிங் பாரத்' மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென் மாநில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமே இது நடக்கிறது; ஏனென்றால் தமிழ்நாட்டில் தேர்தல் வருகிறது.
மத்திய அரசு அனைத்து மொழிகளையும் ஒன்றாகத் தான் பார்க்கிறது. இந்தியை மட்டும் ஊக்குவிக்க நினைக்கவில்லை. திமுகவின் ஒரு தலைவருக்குக்கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அந்நிகழ்ச்சியில் மறுசீரமைப்பு விவகாரம் குறித்து பேசிய வீடியோவை அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதனால்தான் திமுக, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மூடி மறைக்க பார்க்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.






