என் மலர்
இந்தியா

Digital Arrest: ஓய்வு பெற்ற நீதிபதியிடமே சைபர் மோசடி - ரூ.1.66 கோடி பறிப்பு
- நீதிபதியின் மொபைல் எண் மூலம் பெண்களுக்கு ஆபாச அழைப்புகள் விடுக்கப்பட்டது.
- ஆவணங்களை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் காட்டினார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், நெரெட்மெட் பகுதியில் வசிக்கும் 69 வயது ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஒருவர் வசித்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி 23 அன்று, ஒருவரிடமிருந்து நீதிபதிக்கு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசியவர் தன்னை சிபிஐ அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
முன்னாள் நீதிபதியின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலம் பெண்களுக்கு ஆபாச அழைப்புகள் விடுக்கப்பட்டதாகவும், மனிதக் கடத்தல் மற்றும் பணமோசடி ழக்குகளில் அவருக்கு தொடர்பிருப்பதாகவும் என்று அந்த நபர் கூறியுள்ளார்.
டிஜிட்டல் கைது செய்வதாக உச்ச நீதிமன்றத்தின் பெயரில் போலியான பிடிவாரண்ட் மற்றும் ஆவணங்களை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் காட்டி அவரை பயமுறுத்தியுள்ளார்.
எனவே அவர் பணம் செலுத்த வேண்டும் என்றும் நிதி மதிப்பாய்வு முடிந்து குற்றமற்றவர் என நிரூபணமானதும் பணம் திருப்பித் தரப்படும் என அந்த நபர் நம்ப வைத்துள்ளார்.
பயந்துபோன முன்னாள் நீதிபதி, பிப்ரவரி 25 முதல் மார்ச் 2க்குள் நான்கு தவணைகளாக மொத்தம் ரூ.1.66 கோடி பணத்தை அவர் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
பணம் திருப்பி வராததால் சந்தேகமடைந்த முன்னாள் நீதிபதி, தனது நண்பர்களிடம் ஆலோசித்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். கடந்த மார்ச் 6 ம் தேதி சைபர் கிரைம் போலீசாரிடம் அவர் புகார் அளித்தார்.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






