search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியிலும் பரவிய கொரோனா ஜேஎன் 1 வைரஸ்
    X

    டெல்லியிலும் பரவிய கொரோனா ஜேஎன் 1 வைரஸ்

    • இருவருக்கு ஒமிக்ரான் வகை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் துவங்கி இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு மெல்ல தலைதூக்கும் நிலையில், டெல்லியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    "டெல்லியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று பேரில் ஒருவருக்கு ஜே.என்.1 வகை பாதிப்பும், மற்ற இருவருக்கு ஒமிக்ரான் வகை பாதிப்பும் ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது," என டெல்லி சுகாதார துறை மந்திரி சௌரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் நாடு முழுக்க டிசம்பர் 26-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா ஜே.என்.1 வகை மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்து இருப்பதாக சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    "புதிய வகை கொரோனா பாதிப்புகள் தற்போதைக்கு வீரியம் குறைந்த ஒன்றாகவே காணப்படுகின்றன. இவை ஒமிக்ரான் குடும்பத்தை விட்டு தள்ளியே இருப்பதால், இது குறித்து அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், மீண்டும் கொரோனா பாதிப்பு பரவுவது வருந்தக்குரிய விஷயம் தான்."

    "இதன் காரணமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். முன்னெச்சரிக்கையாக இருப்பதன் மூலம், அவை பரவுவதை தடுக்க முடியும்," என்று கங்காராம் மருத்துவமனையின் இருதவியல் துறையின் துணை தலைவர் மருத்துவர் பாபி பாலோத்ரா தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×