என் மலர்
இந்தியா

டெல்லி கார் வெடிப்பு: சம்பவ இடத்தில் அமித் ஷா ஆய்வு.. அனைத்து கோணங்களிலும் விசாரணை என விளக்கம்
- காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
- மேலும் அவர்கள் அனைத்து விசாரணைகளையும் துரிதமாக நடத்தி வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்தது.
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் சம்பவம் குறித்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதன் பின் காயமடைந்தர்வகளை நேரில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அடுத்ததாக விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று அமித் ஷா ஆய்வு செய்து வருகிறார்.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, இன்று மாலை சுமார் 7 மணியளவில், டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே ஒரு ஹூண்டாய் ஐ20 காரில் வெடிப்பு ஏற்பட்டது.
இந்த வெடிப்பின் காரணமாக, 3-4 வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் மக்கள் காயமடைந்தனர். மருத்துவமனை வட்டாரங்களின்படி, இதுவரை எட்டு பேர் இறந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாங்கள் அனைத்து கோணங்களிலும், முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளோம். வெடிப்புச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு, குற்றப் பிரிவு , தேசிய புலனாய்வு முகமை குழு, சிறப்புப் பாதுகாப்புப் குழு, மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக குழு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். மேலும் அவர்கள் அனைத்து விசாரணைகளையும் துரிதமாக நடத்தி வருகின்றனர்.
எங்கள் முகமைகள் குறுகிய காலத்திற்குள் வெடிப்புக்கான காரணத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன்.
வெடிப்புச் செய்தி கிடைத்தவுடன் உடனடியாக எனக்கு பிரதமரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. முதற்கட்ட தகவல்களைப் பெற்ற பிறகு, நான் பிரதமருக்கும் விளக்கமளித்தேன்.
நான் இங்கிருந்து சம்பவ இடத்தைப் பார்வையிடச் செல்கிறேன், மேலும் நாளை காலை, உள்துறை அமைச்சகத்தில் மூத்த அதிகாரிகள் குழுவுடன் ஒரு கூட்டம் நடத்தப்படும். இந்த சம்பவத்தில் மக்களிடம் முழு உண்மையை சொல்வோம்" என்று விளக்கம் அளித்தார்.






