என் மலர்tooltip icon

    இந்தியா

    லடாக் ஒன்றுபட்ட ஜம்மு-காஷ்மீர் பகுதியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை: ஜாவித் ராணா
    X

    லடாக் ஒன்றுபட்ட ஜம்மு-காஷ்மீர் பகுதியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை: ஜாவித் ராணா

    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது.
    • அத்துடன் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு இன்னும் மாநில அந்தஸ்து வழங்கப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில அமைச்சரான ஜாவித் ராணா, லடாக் ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாவதற்கான நாள் வெகுதொலையில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜாவித் ராணா கூறுகையில் "லடாக் மீண்டும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாவதற்கான நாள் வெகு தொலையில் இல்லை என நான் நம்புகிறேன். இதைத் தவிர இந்திய அரசுக்கு மாற்று வாய்ப்பு ஏதுமில்லை.

    நீங்கள் (மத்திய அரசு) ஒரு பகுதியை பாகிஸ்தானுக்குக் கொடுத்தீர்கள். கில்ஜித்-பால்டிஸ்தானும் பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு லடாக்கைப் பிரித்தீர்கள். இப்போது நம்மிடம் இருப்பது ஜம்மு- காஷ்மீர் மட்டும்தான். இந்த நிலத்தை பிரித்தவர்களே, இப்போது கனக் மண்டியை (ஜம்முவில் உள்ள ஒரு பகுதி) கூட ஒரு மாநிலமாக மாற்ற விரும்புகிறார்கள்" என்றார்.

    Next Story
    ×