Strait of Hormuz | ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்தது முதல் கச்சா எண்ணெய் கப்பல்

ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சியுடன், அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்திய சரக்குக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்தது
Strait of Hormuz | ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்தது முதல் கச்சா எண்ணெய் கப்பல்
Published on

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேறாது என ஈரான் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில், இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்ததாக தகவல் வெளியானது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சியுடன், அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தியாவின் Pushpak, Parimal கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பாகச் செல்வதாக தகவல் வெளியானது

இந்நிலையில், வளைகுடா நாட்டில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து முதல் கச்சா எண்ணெய் கப்பல் மும்பை வந்தடைந்தது. இந்தக் கப்பல், 1.35 லட்சம் மெட்ரிக் டன் எண்ணெயைச் சுமந்து வந்துள்ளது. எரிபொருளுடன் கப்பல் இந்தியாவுக்கு வந்துள்ளதால் தட்டுப்பாடு குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com