என் மலர்tooltip icon

    இந்தியா

    கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் அபாயம்
    X

    கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் அபாயம்

    • 1000-க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக அமெரிக்க ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரானும் அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது.

    மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. தாக்குதல் தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக அமெரிக்க ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானும் பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல நாடுகளிலும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. சில தளபதிகளை இழந்தாலும் எங்கள் திறன் குறையவில்லை என்று ஈரான் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

    சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய கடல் வழியான ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக கூறியுள்ள ஈரான், அமெரிக்கா, பிரிட்டனுக்குச் சொந்தமான 3 எண்ணெய் கப்பல்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது.

    மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×