என் மலர்tooltip icon

    இந்தியா

    சமையல் எரிவாயு தட்டுப்பாடு- பெங்களூரில் நாளை முதல் ஓட்டல்கள் இயங்காது என அறிவிப்பு
    X

    சமையல் எரிவாயு தட்டுப்பாடு- பெங்களூரில் நாளை முதல் ஓட்டல்கள் இயங்காது என அறிவிப்பு

    • எண்ணெய் நிறுவனங்கள் வணிகரீதியான சிலிண்டர் விநியோகத்தை திடீரென நிறுத்தியுள்ளன.
    • ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளில் (ஈரான்-இஸ்ரேல்) நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, எண்ணெய் நிறுவனங்கள் வணிகரீதியான சிலிண்டர் விநியோகத்தை திடீரென நிறுத்தியுள்ளன.

    கடந்த சனிக்கிழமை (மார்ச் 7), வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60-ம், வணிக சிலிண்டர் விலை ₹115-ம் உயர்த்தப்பட்டது.

    சிலிண்டர் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த ₹150 தள்ளுபடி நிறுத்தப்பட்டதால், ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு மொத்தம் ₹265 கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

    இதனால், பெங்களூருவில் நிலவி வரும் வணிகரீதியான சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, நாளை முதல் (மார்ச் 10, 2026) ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வளைகுடா நாடுகளில் போர்ச் சூழல் காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு எரிபொருள் வருகை முற்றிலும் தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×