என் மலர்
இந்தியா

மோடி இருக்கையை முற்றுகையிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் - வீடியோ வெளியிட்ட மத்திய அமைச்சர்
- பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு
- காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை "நேரடியாகத் தாக்க" திட்டமிட்டிந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்ததாகச் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தெரிவித்தார்.
பிரதமரின் பாதுகாப்பு கருதியே அவரது பதிலுரை ரத்து செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்களை கேடயமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்ததாக ஓம் பிர்லா தெரிவித்தார்.
பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "காங்கிரஸ் கட்சி தங்கள் எம்.பி.க்களின் மிகவும் இழிவான நடத்தையைப் பற்றி பெருமை கொள்கிறது. நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.






