search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதுச்சேரி, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
    X

    புதுச்சேரி, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

    • உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.7.50 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.
    • ரெயில்களில் முதியோருக்கு ரத்து செய்யப்பட்ட கட்டண சலுகை மீண்டும் அமல்படுத்தப்படும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:-

    * 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் நாடு முழுவதும் பள்ளிக்கல்வி இலவசம்.

    * மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கட்டாயமில்லை. நீட் மற்றும் கியூட் தேர்வை மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி முடிவு செய்யலாம். மாநில அரசுகளே தங்களுக்கான தேர்வு முறைகள் மூலம் மாணவர்கள் சேர்க்கையை நடத்தலாம்.

    * மகாலட்சுமி திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    * தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் அமல்படுத்தப்படும்.

    * தேசிய கல்விக் கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும்.

    * உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.7.50 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.

    * விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும்.

    * ரெயில்களில் முதியோருக்கு ரத்து செய்யப்பட்ட கட்டண சலுகை மீண்டும் அமல்படுத்தப்படும்.

    * புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

    * 100 நாள் வேலை திட்டத்திற்கான கூலி நாள் ஒன்றுக்கு ரூ.400 ஆக உயர்த்தப்படும்.

    * முன்னேறிய பிரிவினரிடம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து பிரிவினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

    * ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க சட்டம் இயற்றப்படும்.

    * விளையாட்டில் சிறந்து விளங்கும் 21 வயதுக்கு உள்பட்ட இளையோருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    * நாடு முழுவதும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறை கொண்டு வரப்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×