பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார்: அவர் மீண்டும் சரணடைவார்- ராகுல் காந்தி விமர்சனம்

டிரம்புக்கு வரி விதிக்க அதிகாரம் இல்லை என அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனவும் நீதிமன்றம் விமர்சனம்.
பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார்: அவர் மீண்டும் சரணடைவார்- ராகுல் காந்தி விமர்சனம்
Published on

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில் "பிரதமர் சமரசம் செய்து கொண்டார். அவரது துரோகம் இப்போது அம்பலமாகியுள்ளது. அவரால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் மீண்டும் சரணடைவார்" என்றார்.

முன்னதாக காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியின் முடிவை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com