என் மலர்
இந்தியா

ஆர்.எஸ்.எஸ். அமைப்பாக பதிவு செய்யாதது குறித்து கேள்வி எழுப்பிய பிரியங்க் கார்கே
- பதிவு செய்யப்படாத அமைப்பிற்கு பணம் எங்கிருந்து வருகிறது?.
- நீங்கள் பதிவு செய்திருந்தால், வரி செலுத்த வேண்டும். சட்டத்திற்கு இணங்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான கார்கேயின் மகனும், கர்நாடக மாநில அமைச்சருமான பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பாக பதிவு செய்யாதது குறித்து குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பிரியங் கார்கே கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்று என் முகத்தின் மீது ஆதாரங்களை தூக்கி வீசினால், பிரச்சினை முடிந்தது. பதிவு செய்யப்படாத அமைப்பிற்கு பணம் எங்கிருந்து வருகிறது?, அவர்களுக்கு ஆடைகள் தைப்பதற்கு, பேரணிகள் நடத்துவதற்கு, டிரம்ஸ் போன்றவற்றை வாங்குவதற்கு, கட்டிடம் கட்டுவதற்கு பணம் எங்கிருந்து வருகிறது?. பதிவு செய்யப்படாத அமைப்பாக இருந்தால், எப்படி பணம் பெற முடியும்?.
நீங்கள் பதிவு செய்திருந்தால், வரி செலுத்த வேண்டும். சட்டத்திற்கு இணங்க வேண்டும். வெளிநாட்டு மற்றும் தனியார் நன்கொடை குறித்த தகவல்ளை பகிர வேண்டும். ஆகவே, அவர்கள் பதிவு பெறவில்லை.
இவ்வாறு பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில், ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பிரியங்க் கார்கே முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவர்களுக்கு உதவி செய்யும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திருந்தார்.






