search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நல்லாட்சி மீண்டும் ஆட்சியில் அமர்த்தும்: மல்லிகார்ஜூன கார்கே
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நல்லாட்சி மீண்டும் ஆட்சியில் அமர்த்தும்: மல்லிகார்ஜூன கார்கே

    • ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது
    • தொடர்ந்து 2-வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரம்

    ராஜஸ்தானில் அடுத்த மாதம் (நவம்பர்) 25-ந்தேதி, மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க, துரிதமாக வேலை செய்து வருகிறது.

    அதேவேளையில், பா.ஜனதாவும் ஆட்சியை பிடிக்க விரும்புகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக்க நினைக்கிறது. ராஜஸ்தானில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாறிமாறி வந்துள்ளது. இதனால் பா.ஜனதா இந்த முறை தங்களுக்குதான் வாய்ப்பு என்ற முறையில் வேலை செய்து வருகிறது. தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே பிரதமர் மோடி, அமித் ஷா போன்ற தலைவர்கள் ராஜஸ்தான் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான, காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ராஜஸ்தான் மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தாவா, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த், பொது செயலாளர் (ஒருங்கிணைப்பு) கே.சி. வேனுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்திற்குப்பின் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் ''சேமிப்பு, நிவாரணம், வளர்ச்சி, பாதுகாப்பு, உயர்வு போன்ற அம்சங்களில் காங்கிரசின் நல்லாட்சியால் ராஜஸ்தான் வளர்ச்சியை கண்டுள்ளது. இதனால் மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று நம்புகிறோம்'' என்றார்.

    Next Story
    ×