என் மலர்
இந்தியா

3வது முறை ஆட்சியை பிடிக்குமா ஆம் ஆத்மி: முதல் மந்திரி அதிஷி விளக்கம்
- மொத்தமுள்ள 70 தொகுகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
- டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என தெரிவித்தது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்.
மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அதற்கான பணிகளை தொடங்கிவிட்டார். மொத்தமுள்ள 70 தொகுகளுக்கும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
டெல்லி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் தலா 2,100 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தலைநகர்டெல்லியில் முதல் மந்திரி அதிஷி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல் மந்திரியாகப் பதவியேற்ற, பிறகு கடந்த 10 ஆண்டுகளாக சாமானிய மக்களுக்காக உழைத்தவர்.
டெல்லி வரலாற்றில் ஏழை மக்களுக்காக பாடுபட்ட ஒரே தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே.
24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் ஒரே நகரம் டெல்லிதான்.
10 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் அரசுப் பள்ளிகளில் எந்த வசதியும் இல்லை. தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி அரசு அமைய மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறோம் என் தெரிவித்தார்.






