என் மலர்
இந்தியா

மத்திய அரசு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றச்சாட்டு
- அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை.
- மனுதாரர்களை முழுமையாகக் கேட்ட பிறகு, மத்திய அரசு இந்த மனுவை ஒரு பெரிய அமர்விற்கு மாற்ற அனுமதிக்க முடியாது.
புதுடெல்லி:
பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சீரான சேவை நிபந்தனைகளை வகுத்துள்ள தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மனுக்களை விசாரிக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
மனுதாரர்களின் வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, சர்வதேச நடுவர் மன்றத்தில் பங்கேற்க அனுமதிக்குமாறு அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி விடுத்த கோரிக்கையை ஏற்று விசாரணையை ஒத்திவைத்தது. மனுதாரர்களின் வாதங்களை முடித்த பிறகு, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு நள்ளிரவில் தாக்கல் செய்த மனுவை ஏற்க தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பி.ஆர். கவாய் கூறுகையில்,
* அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை.
* மத்திய அரசு திட்டமிடப்பட்ட விசாரணைக்கு முன்னதாக நள்ளிரவில் ஒரு மனுவை தாக்கல் செய்வதன் மூலம் இதுபோன்ற தந்திரோபாயங்களில் ஈடுபடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
* மனுதாரர்களை முழுமையாகக் கேட்ட பிறகு, மத்திய அரசு இந்த மனுவை ஒரு பெரிய அமர்விற்கு மாற்ற அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.






