search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிமி அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு
    X

    சிமி அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு

    • கடந்த 2001-ல் வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது சிமி அமைப்பு முதன்முதலாக தடை செய்யப்பட்டது.
    • அதன்பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 2001-ல் ஆட்சியில் இருந்தபோது சிமி அமைப்பு முதன்முதலில் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. 2014-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதும் சிமி அமைப்பின் மீது 5 ஆண்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதிலும், நாட்டில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதிலும் ஈடுபட்டதற்காக சிமி அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

    இதுகுறித்து உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாது. பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதிலும், பாரதத்தின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களிலும் சிமி அமைப்பு ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிமி மீது விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×