என் மலர்tooltip icon

    இந்தியா

    கார், பைக்குகள் மீதான GST வரியை குறைக்க மத்திய அரசு முடிவு - விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு
    X

    கார், பைக்குகள் மீதான GST வரியை குறைக்க மத்திய அரசு முடிவு - விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு

    • தற்போது கார்கள், இரு சக்கர வாகனங்கள் மீது 28% வரி விதிக்கப்படுகிறது.
    • SUV-க்கள் மீது 50% வரி விதிக்கப்படுகிறது

    பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், "இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது; ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்தகட்ட மாற்றங்களை இந்த தீபாவளிக்கு கொண்டு வர உள்ளோம்" என்று தெரிவித்தார்.

    அக்டோபர் 20 தீபாவளி வருகிறது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில், கார் மற்றும் பைக்குகள் போன்ற வாகனங்கள் மீதான வரியைக் கணிசமாகக் குறைக்க ஒன்றிய அரசு முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    கார்கள், SUV-க்கள், மற்றும் இருசக்கர வாகனங்களை 18% ஜி.எஸ்.டி. வரியின் கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போது கார்கள், இரு சக்கர வாகனங்கள் மீது 28% வரியும், SUV-க்கள் மீது 50% வரியும் இருப்பதால் அரசின் புதிய முடிவால் கார் மற்றும் பைக்குகளின் விலை கணிசமாகக் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×