search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநில அந்தஸ்து, 2024 செப்டம்பருக்குள் தேர்தல்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
    X

    மாநில அந்தஸ்து, 2024 செப்டம்பருக்குள் தேர்தல்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன் மாநிலம் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.
    • 2019-க்குப் பிறகு தேர்தல் நடத்தப்படவில்லை. எல்லை வரையறை செய்த பின் தேர்தல் என மத்திய அரசு தெரிவித்தது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

    சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டன. தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் கவாய், சூரியகாந்த் ஆகிய மூவரும் ஒருமித்த கருத்தை தீர்ப்பாக வெளியிட்டுள்ளனர். ஆனால் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டு உள்ளார். நீதிபதி சஞ்சீவ் கண்ணா வேறொரு தீர்ப்பை வழங்கினார்.

    மூன்று தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் ஒரே தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். பின்னர் ஒட்டுமொத்தமாக சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதற்குள் நாங்க செல்ல விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். என்றபோதிலும் மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    லடாக்கை மறுசீரமைப்பு யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

    Next Story
    ×