என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரி குறைப்பு: மத்திய அரசு யாருக்கு உதவ வேண்டும்?- பிரியங்கா காந்தி கேள்வி

- அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படும்போது கொள்முதல் விலையும் குறையும்.
- கூடுதல் வரிகளை நீக்குவதால் ஆப்பிள், வால்நட் மற்றும் பாதாம் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
புதுடெல்லி:
அமெரிக்க ஆப்பிள்கள், அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் மீதான கூடுதல் வரிகளை நீக்குவது குறித்து மத்திய அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதன்படி, அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரியை 35 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படும்போது கொள்முதல் விலையும் குறையும். இதனால் இமாச்சலபிரதேசம், சிம்லாவில் உள்ள ஆப்பிள்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இங்கு ஆப்பிள் விவசாயிகள் கஷ்டப்படும்போது அரசு யாருக்கு உதவ வேண்டும்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூடுதல் வரிகளை நீக்குவதால் ஆப்பிள், வால்நட் மற்றும் பாதாம் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. மாறாக இந்த தயாரிப்புகளின் பிரீமியம் சந்தை பிரிவில் நியாயமான போட்டி ஏற்படும். அதன் மூலம் போட்டி தன்மையில் சிறந்த தரத்தை உறுதி செய்யும் என கூறப்பட்டு உள்ளது.