என் மலர்tooltip icon

    இந்தியா

    மணமக்களின் உறுதிமொழி சபதம்- வீடியோ வைரல்
    X

    மணமக்களின் உறுதிமொழி சபதம்- வீடியோ வைரல்

    • பொறாமை, வெறுப்பு மற்றும் வதந்திகளில் இருந்து நான் எப்போதும் விலகி இருப்பேன் என கூறினார்.
    • ஏராளமான பயனர்கள் தம்பதிக்கு வாழ்த்துக்கள் கூறினர்.

    திருமண விழாவின் போது மணமக்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீதா படோலா என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் மணமகன் வெள்ளை நிற குர்கா அணிந்திருந்தார். மணமகள் சிவப்பு நிற சேலை அணிந்திருக்கிறார். மேடையை சுற்றி விருந்தினர்கள் அமர்ந்திருக்கின்றனர்.

    அப்போது மணமக்கள் உறுதி மொழி வாசிக்கும் காட்சிகள் அதில் உள்ளது. மணமகள் தனது உறுதிமொழியில், நான் எப்போதும் மதத்தை பின்பற்றுவேன். கண்ணியத்திற்கு ஏற்ப எனது எண்ணங்களையும், நடத்தையையும் வளர்த்துக்கொள்வேன். நான் எப்போதும் கணவருக்கு விசுவாசமாக இருப்பேன். ஒரு போதும் ஏமாற்ற மாட்டேன். வீட்டு செலவுகளை விவேகத்துடன் நிர்வகிப்பேன். சேவை, தூய்மை, அன்பான பேச்சு போன்ற பழக்கங்களை தொடர்ந்து அதிகரிப்பேன். இந்த வழியில் நான் எப்போதும் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுப்பவளாக இருப்பேன்.

    பொறாமை, வெறுப்பு மற்றும் வதந்திகளில் இருந்து நான் எப்போதும் விலகி இருப்பேன் என கூறினார். இதே போல மணமகன் தனது உறுதிமொழியில், நான் ஒரு போதும் வெறுப்பு கொள்ளமாட்டேன். நான் என் மனைவியின் நண்பனாக இருப்பேன். மனைவியிடம் கண்ணியமாகவும், மென்மையாகவும் பழகுவேன். சம்பாதிப்பது மற்றும் செலவு செய்வது பற்றி எனது மனைவியுடன் விவாதிப்பேன் என கூறியிருந்தார்.

    மணமக்களின் இந்த உறுதிமொழி சபதம் குறித்த வீடியோ பயனர்களை மிகவும் கவர்ந்தது. பலரும், இந்த ஜோடி அழகாக இருக்கிறது. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என பதிவிட்டனர். ஏராளமான பயனர்கள் தம்பதிக்கு வாழ்த்துக்கள் கூறினர்.

    Next Story
    ×