என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐதராபாத்தில் காதலியின் கணவரை கொலை செய்த காதலன்
    X

    ஐதராபாத்தில் காதலியின் கணவரை கொலை செய்த காதலன்

    • திருமணத்திற்கு பிறகும் ஸ்ரவாணி சந்தியா தனது காதலன் பவனுடன் தொடர்பில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
    • 4 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள காதலனை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், ஆதிவபுடியை சேர்ந்தவர் ஸ்ரவாணி சந்தியா. இவரும் அதே பகுதியை சேர்ந்த பவன் என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பவன் தன்னுடைய பெற்றோர்களுடன் சிறுவாணி சந்தியா வீட்டிற்கு சென்று அவர்களது மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என கேட்டார்.

    ஆனால் அவர்கள் பெண் தர மறுப்பு தெரிவித்தனர். மேலும் ராஜமுந்திரி மாவட்டம், மூலகடாவை சேர்ந்த வெங்கட்ரமணா (வயது 30). கார் டிரைவருக்கு தங்களது மகளை திருமணம் செய்து கொடுத்தனர்.

    தற்போது அவர்கள் ஐதராபாத் கே.பி.எச்.பி. காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். காதலியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததால் அவரது கணவரை கொலை செய்ய பவன் திட்டமிட்டு வந்தார்.

    அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்கள் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று இருந்தனர்.

    இதனை அறிந்த பவன் தனது 4 நண்பர்களுடன் வந்து வெங்கட்ரமணா குடியிருப்பு அருகே சத்தம் போட்டு கத்தி கொண்டு இருந்தனர். இதனை தட்டி கேட்க கார் பார்க்கிங் பகுதியில் வெங்கட்ரமணா நடந்து சென்றார். அப்போது அங்கு பதுங்கி இருந்த பவன் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கட்ராமணாவை சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பவனை தேடி வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் ஸ்ரவாணி சந்தியா தனது காதலன் பவனுடன் தொடர்பில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×