என் மலர்tooltip icon

    இந்தியா

    பாஜக-வால் 30 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது: திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர்
    X

    பாஜக-வால் 30 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது: திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர்

    • மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சர் ஆவார்.
    • அதே வேளையில் பாஜக மண்ணைக் கவ்வும்.

    மேற்கு வங்கத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் பாஜக-வால் 30 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட தக்கவைத்துக் கொள்ள தவறும் என்று திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குனால் கோஷ் தெரிவித்துள்ளார்.

    மேலும், "வாக்குகளுக்காக மக்களை பாஜக சந்திக்கும்போது, இதுவரை மேற்கு வங்க ஏழை மக்களுக்கான 1.86 லட்சம் கோடி ரூபாயை நிதியை விடுவிக்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சர் ஆவார். அதே வேளையில் பாஜக மண்ணைக் கவ்வும்" என்றார்.

    Next Story
    ×