என் மலர்tooltip icon

    இந்தியா

    72 இடங்களுக்கான 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக: நாக்பூரில் நிதின் கட்கரி போட்டி
    X

    72 இடங்களுக்கான 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக: நாக்பூரில் நிதின் கட்கரி போட்டி

    • முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. கடந்த 2ம் தேதி வெளியிட்டது.
    • 2வது கட்டமாக 72 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் பா.ஜ.க. 2வது கட்ட பட்டியலை வெளியிட்டது. அதன்படி 72 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டுள்ளது.

    இதில், நாக்பூர் மக்களவை தொகுதியில் நிதின் கட்கரி போட்டியிடுகிறார்.

    மத்திய மந்திரி அனுராக் தாக்குர் இமாசலின் ஹமீர்பூர், முன்னாள் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை ஹவேரியிலும், மத்திய மந்திரி பியூஷ் கோயல் மும்பை வடக்கு ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர்.

    கடந்த 2-ம் தேதி வெளியான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 195 பேர் இடம்பெற்றனர். பிரதமர் மோடி வாரணாசியில் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    Next Story
    ×