என் மலர்
இந்தியா

பெங்களூருவில் கட்டமைப்பு மோசம்: வரி செலுத்த மாட்டோம் என மக்கள் மிரட்டல்- டி.கே. சிவக்குமார் அளித்த பதில்
- நல்ல கட்டமைப்பு இல்லை என்றால் சொத்து வரி வசூலிக்கக்கூடாது.
- தார்ச்சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதாக துணை முதல்வர் தகவல்.
பெங்களூருவில் வசித்து வரும் மக்கள், மோசமான கட்டமைப்புகள் மூலம் கடுமையாக பாதிக்கப்படுவதாக தங்கள் ஆதங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் சாலையில் வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது.
பெங்களூருவில் ஏராளமான தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. இங்கு வேலைப் பார்ப்பவர்கள் நிறுவனத்திற்கு வந்து செல்வதற்கு கடும் சிரமப்படுகின்றனர். இதனால் நிறுவனத்தை பெங்களூருவில் இருந்து மாற்றப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.
இந்த நிலையில்தான் பெங்களூருவில் கட்டமைப்புகள் மிகவும் மோசமாக உள்ளன. இதனால் சொத்து வரி கட்டமாட்டோம் வரி செலுத்துவோர் என பெங்களூருவில் வாழும் மக்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதற்கு கர்நாடக மாநில துணைமுதல்வர் டி.கே. சிவக்குமார் பதில் அளிக்கும் வகையில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "பெங்களூரு நகரில் சீரான போக்குவரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் தார்ச்சாலை போடும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. குண்டு குழிகளை சரிசெய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
வருமான வரி செலுத்துவோர் அடங்கிய தனிநபர் வரி செலுத்துவோர் மன்றம், முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில், நல்ல பொது உள்கட்டமைப்பு வழங்கப்படாவிட்டால், கிரேட்டர் பெங்களூரு ஆணையம் சொத்து வரி வசூலிப்பதைத் தவிர்க்கவும்" என அதில் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான் டி.கே. சிவக்குமார் பதில் அளித்துள்ளார். இவர்தான் பெங்களூரு வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார்.






