என் மலர்
இந்தியா

SIR: ஆவணங்களுடன் ஆஜராக மேற்கு வங்க மாநில அமைச்சருக்கு நோட்டீஸ்..!
- தஜ்முல் ஹொசைன் 3 முறை எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர்.
- அவரது தந்தை முஸ்லிம் மதத்திற்கு மாறியவர்.
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் வரை வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இதில் பெயர் இல்லாதவர்கள் பெயர்களை சேர்க்க முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
2002-ல் உள்ள வாக்காளர் பட்டியலுக்கும், தற்போதுள்ள பட்டியலுக்கும் இடையில் வேறுபாடு இருப்பின், அவர்களுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க கேடடுக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் மேற்கு வங்க மாநில அமைச்சர் தஜ்முல் ஹொசைனுக்கு நோட்டீஸ் அனுப்பப்படடுள்ளது. அதில் தொடர்பான ஆவணங்களுடன் ஜனவரி 29-ந்தேதி காலை 10.30 மணிக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தஜ்முல் ஹொசைன் கூறியதாவது:-
இதே தேர்தல் ஆணையம் தன்னை 3 முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது தகுதியான வாக்காளர்தானே என்பதை உறுதிப்படுத்த கேட்கிறது. தேர்தல் நடைபெற 3 மாதங்களே இருக்கும் நிலையில், பாஜக ஆதாயம் அடைவதற்காகவே SIR நடத்தப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் பாஜக அரசை நிறுவுவதற்கு இதுபோன்ற சதித்திட்டதிற்கு எதிராக மேற்கு வங்க மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
இவ்வாறு தெரிவித்தார்.
தஜ்முல் ஹொசைனின் தந்தை பெயர் திதர் ஹொசைன். இவர் யாதவ் சமூதாயத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியவர். இவருடைய மூதாதையர் வீடு உத்தர பிரதேசத்தில் உள்ளது. இவருடைய குடும்பத்தினர் அங்கு வசித்து வருகின்றனர்.
தஜ்முல் ஹொசைன் 2006 மற்றும் 2016-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2021-ல் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சராக உள்ளார்.
அதேபோல், ஐ.எஸ்.எஃப் சட்டமன்ற உறுப்பினர் நவுசாத் சித்திக் என்பவருக்கும் ஆவணங்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சித்திக் சமர்ப்பித்த ஆவணங்களில் முரண்பாடு இருப்பதை கண்டறிந்தோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






