search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வணிகத்தில் சிறந்து விளங்கியதற்காக தெற்கு ரெயில்வேக்கு விருது: மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் வழங்கினார்
    X

    வணிகத்தில் சிறந்து விளங்கியதற்காக தெற்கு ரெயில்வேக்கு விருது: மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் வழங்கினார்

    • 68-வது ரெயில்வே வார விழா நேற்று முன்தினம் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடந்தது.
    • விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார்.

    டெல்லியில் நடந்த விழாவில் வணிகத்தில் சிறந்து விளங்கியதற்காக தெற்கு ரெயில்வேக்கு மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் விருது வழங்கினார்.

    இந்திய ரெயில்வே துறை சார்பில் ரெயில்வேயில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வாரம் தோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 68-வது ரெயில்வே வார விழா நேற்று முன்தினம் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடந்தது.

    இந்த விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மண்டலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 100 ரெயில்வே ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

    இதில், தெற்கு ரெயில்வேக்கு வர்த்தகத் திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பெற்றுக்கொண்டார். இதுபோக, தெற்கு ரெயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் 9 ஊழியர்களுக்கு நட்சத்திர செயல்திறன் விருதுகள் வழங்கப்பட்டது.

    அதன்படி, தண்டவாள பராமரிப்பு பணிக்காக வீரபெருமாள் என்பவருக்கும், லோகோ பைலட் பிரிவில் சுதீஷ்குமார் என்பவருக்கும், டிக்கெட் இன்ஸ்பெக்டர் பிரிவில் செல்வக்குமார், ஆர்.பி.எப்.இன்ஸ்பெக்டர் பிரிவில் மதுசூதன் ரெட்டி, சீனியர் செசன் என்ஜினீயர் பிரிவில் செல்வராஜா, சீனியர் கோட்ட பொறியாளர் மயிலேரி, தலைமை செவிலியர் கண்காணிப்பாளர் துர்காதேவி, கோட்ட வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன், சிறப்பான திட்டங்கள் பிரிவில் மாரியப்பன் என்பவருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×