search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெற்றி நிச்சயம்... குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கெஜ்ரிவால் சொன்ன உற்சாக வார்த்தை
    X

    வெற்றி நிச்சயம்... குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கெஜ்ரிவால் சொன்ன உற்சாக வார்த்தை

    • குஜராத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது.
    • ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அந்த மாநிலத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில் குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதியை அறிவித்தவுடன் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    தனது கட்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் குஜராத் மக்களுக்கு தனது வேண்டுகோளையும் முன்வைத்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "நான் உங்கள் சகோதரன், உங்கள் குடும்பத்தின் ஒரு அங்கம். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இலவச மின்சாரம் தருகிறேன்; பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டுகிறேன். உங்களை அயோத்தியின் ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறேன்" என கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

    தற்போதைய சூழ்நிலையில், குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 90 முதல் 95 தொகுதிகள் வரை கைப்பற்றுவோம். மேலும் இந்த வேகம் தொடர்ந்தால் 140 முதல் 150 தொகுதிகள் வரை வெற்றி பெறுவோம் என ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறியிருக்கிறார்.

    கடந்த தேர்தலில் 30 தொகுதிகளில் போட்டியிட்டு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

    Next Story
    ×