என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு- காஷ்மீர் செல்லும் ராணுவ தளபதி: உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை
    X

    ஜம்மு- காஷ்மீர் செல்லும் ராணுவ தளபதி: உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை

    • ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
    • ஜம்மு காஷ்மீரில் நாளை ராணுவ உயரதிகாரிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.

    மேலும், தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

    இந்நிலையில், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.

    ஜம்மு காஷ்மீரில் நாளை ராணுவ உயரதிகாரிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.

    பாதுகாப்பு, பயங்கரவாதிகளுக்கு பதிலடி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×