என் மலர்
இந்தியா

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் கைது
- பள்ளி நிர்வாகம் சார்பில் சைல்டுலைனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
- கிருஷ்ணன் குட்டி நாயரை போஸ்கோ சட்டத்தின் கீழ் மங்களபுரம் போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கன்னியாபுரத்தை சேர்ந்த முதியவர் கிருஷ்ணன் குட்டி நாயர் (வயது 72). இவர் கீழவூர் சந்திப்பில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு பொருட்கள் வாங்கு வதற்கு வந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனை அந்த சிறுமி தனது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார். சிறுமியை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் சைல்டுலைனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கிருஷ்ணன் குட்டி நாயரை போஸ்கோ சட்டத்தின் கீழ் மங்களபுரம் போலீசார் கைது செய்தனர்.
Next Story






