search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் அமித்ஷா-சந்திரபாபு நாயுடு சந்திப்பு
    X

    டெல்லியில் அமித்ஷா-சந்திரபாபு நாயுடு சந்திப்பு

    • ஜெகன்மோகன் ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் தெலுங்கு தேசம் பா.ஜ.க., ஜனசேனா கட்சி கூட்டணி கட்டாயம் தேவைபடுவதாகவும் தெரிவித்தார்.
    • சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 10 தொகுதிகள் பட்டியலை வழங்கியுள்ளார்.

    ஆந்திரா முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

    மத்திய மந்திரி அமித்ஷா அழைப்பின் பேரில் சென்ற சந்திரபாபு நாயுடு நேற்று இரவு அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

    அப்போது நாடு மற்றும் மாநிலத்தின் நலனை கருதி சந்திரபாபு நாயுடுவை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர அமித்ஷா அழைப்பு விடுத்தார்.

    ஆந்திராவில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் தெலுங்கு தேசம் பா.ஜ.க., ஜனசேனா கட்சி கூட்டணி கட்டாயம் தேவைபடுவதாகவும் தெரிவித்தார்.

    அப்போது ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் திருப்பதி, ராஜ மகேந்திரபுரம் உள்ளிட்ட 7 தொகுதிகளை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 10 தொகுதிகள் பட்டியலை வழங்கியுள்ளார்.

    ஆந்திராவில் வரும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என நிலை உள்ளதால் பா.ஜ.க. கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவையும் அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

    ஆந்திராவில் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸுக்கு எதிராக தெலுங்கு தேசம் பா.ஜ.க.-பவன்கல்யானின் ஜனசேனா என வலுவான கூட்டணி அமைய உள்ளதால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×