என் மலர்
இந்தியா

ராணுவத்தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் முறியடிப்பு- கர்னல் சோபியா குரோஷி
- இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் ஆய்வு செய்யப்படுகிறது.
- பாகிஸ்தான் இந்தியா மீது ஏவிய ட்ரோன் விமானங்கள் துருக்கியில் இருந்து வாங்கப்பட்டவை.
பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்து வருகிறது.
வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரோஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.
அப்போது, கர்னல் சோபியா குரோஷி கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. ராணுவத்தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் ஆய்வு செய்யப்படுகிறது. பாகிஸ்தான் இந்தியா மீது ஏவிய ட்ரோன் விமானங்கள் துருக்கியில் இருந்து வாங்கப்பட்டவை.
இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்கள் கடுமையாக சேதமடைந்தன. சுமார் 400 ட்ரோன் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது.
தனது வான் எல்லையை மூடாமல் பயணிகள் விமானங்களை பறக்கவிட்டு அதனை கேடயமாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது.
போர் பதற்றம் உள்ள நிலையிலும் கராச்சி, லாகூர் வான்வெளியில் பயணிகள் வமானங்களை பறக்க அனுமதித்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






