என் மலர்tooltip icon

    இந்தியா

    அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம்
    X

    அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம்

    • 11ஏ இருக்கையில் பயணம் செய்த ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற பயணி உயிர் பிழைத்தார்.
    • விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்து இருக்கிறது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 (போயிங் 787-8) விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானிநகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர்.

    இதில் 11ஏ இருக்கையில் பயணம் செய்த ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற பயணியை தவிர மற்ற 241 பெரும் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் விமானம் வெடித்து சிதறியதால் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது.

    கல்லூரி வளாகத்தில் இருந்த ஏராளமானவர்கள் இந்த கோர விபத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 33 பேர் பலியாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இதனால் அகமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்து இருக்கிறது.

    இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இதனிடையே விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

    டாடா குழுமம் சார்பில் ஏற்கனவே ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினரின் உடனடி தேவைகளுக்காக கூடுதலாக இத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×