என் மலர்tooltip icon

    இந்தியா

    விபத்துக்குள்ளானது லண்டன் புறப்பட்ட AI 171 விமானம் - 242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
    X

    விபத்துக்குள்ளானது லண்டன் புறப்பட்ட AI 171 விமானம் - 242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல்

    • ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
    • விமானம் டேக் ஆஃப் ஆனபோது விபத்து ஏற்பட்டதாக குஜராத் ஊடகங்கள் தகவல் வெளியாகி உள்ளது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    மேகனி நகரில் நடந்த விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

    பிற்பகல் 1.7 மணி அளவில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    விமானம் டேக் ஆஃப் ஆனபோது விபத்து ஏற்பட்டதாக குஜராத் ஊடகங்கள் தகவல் வெளியாகி உள்ளது.

    விபத்துக்குள்ளான விமானம் ஏர் இந்தியா AI 171 எனவும், இந்த விமானத்தின் மொத்த இருக்கைகள் எண்ணிக்கை 242 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்பகுதியில் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து சடலங்கள் தூக்கி செல்லப்படும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×