என் மலர்tooltip icon

    இந்தியா

    AI 171 விமான விபத்து - சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை
    X

    AI 171 விமான விபத்து - சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை

    • பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு லண்டன் விமானத்தை இயக்கிய விமானி தகவல் அனுப்பி உள்ளார்.
    • விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 3 நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பிடித்து வெடித்தது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட AI 171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு லண்டன் விமானத்தை இயக்கிய விமானி தகவல் அனுப்பி உள்ளார்.

    விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 3 நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பிடித்து வெடித்தது.

    லண்டன் வரை செல்லும் விமானம் என்பதால் டேங்க் முழுவதும் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. டேங்க் முழுவதும் எரிபொருள் இருந்ததால் தான் கீழே விழுந்து பெரும் வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்க முயன்று விமானம் குடியிருப்பு பகுதிகளில் விழுந்தது.

    விமான விபத்து நடந்த இடத்திற்கு 90 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப்படை விரைந்தது.

    Next Story
    ×