என் மலர்
இந்தியா

விமானம் விழுந்த இடத்தில் பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதி: 60 பேர் கதி என்ன?
- விமானம் விழுந்த இடத்தில் பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதி இருந்துள்ளது.
- மதிய உணவு இடைவேளை என்பதால் பலர் விடுதியில் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் இருந்துள்ளனர். இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர்.
இவர்களில் 110 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விழுந்த பகுதியில் பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதி இருந்துள்ளது. மதிய நேரம் என்பதால் பயிற்சி மருத்துவர்கள் ஏராளமானோர் உணவு அருந்த விடுதிக்கு வந்ததாக தெரிகிறது. விடுதி கட்டிடம் முற்றிலுமாக எரிந்துள்ளது. இதனால் 60க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் கதி என்ன? என அஞ்சப்படுகிறது.
Next Story






