என் மலர்
இந்தியா

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 110 பலி?
- விமானிகள் மற்றும் பணிப்பெண்களுடன் 242 பேர் பயணம் செய்துள்ளனர்.
- 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர். இதில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்வர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. 12 வயதிற்கு உட்பட்ட 14 குழந்தைகள் பயணம் செய்துள்ளனர்.
இந்த விபத்தில் 110 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






