search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத்தில் ஆட்சியமைத்தால் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம்- கெஜ்ரிவால் வாக்குறுதி
    X

    குஜராத்தில் ஆட்சியமைத்தால் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம்- கெஜ்ரிவால் வாக்குறுதி

    • 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என கெஜ்ரிவால் உறுதி
    • டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம்.

    சூரத்:

    குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை ஆம் ஆத்மி கட்சி தொடங்கி உள்ளது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது.

    இந்நிலையில், சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

    குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி அமைந்ததும், அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். டிசம்பர் 2021 வரையிலான நிலுவையில் உள்ள மின் கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.

    கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி செய்திருக்கிறது. அவர்களிடம் புதிய யோசனைகள் இல்லை. தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றப்படாத பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆட்சிக்கு வந்ததும் அந்த தேர்தல் அறிக்கையை குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார்கள். டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். எனவே, எங்களுக்கு மக்கள் வாய்ப்பு வழங்குங்கள். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தமுறை எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.

    இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

    Next Story
    ×