என் மலர்
இந்தியா

ஆட்சிக்கு வந்த பிறகு சந்திரபாபு நாயுடு சந்திரமுகியாக மாறிவிட்டார்- ஜெகன்மோகன் ரெட்டி
- சந்திரபாபு நாயுடு ஆட்சியில் மது மற்றும் மணல் மாபியா கும்பல் ஊழலில் ஈடுபட்டு வருகிறது.
- தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றைக் கூட சந்திரபாபு நாயுடு நிறைவேற்றவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி தாடி பள்ளியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் மது மற்றும் மணல் மாபியா கும்பல் ஊழலில் ஈடுபட்டு வருகிறது.
ஊழலுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும். உங்களுக்கு ஆதரவாக எப்போதும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். ஆந்திர மக்கள் ஜெகன்மோகன் ரெட்டி தயிர் சாதம் போடுவார் என்றும் சந்திரபாபு நாயுடு பிரியாணி போடுவார் என்றும் நம்பி வாக்கு அளித்தனர். தற்போது அது இரண்டுமே இல்லாமல் போய்விட்டது.
தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றைக் கூட சந்திரபாபு நாயுடு நிறைவேற்றவில்லை. கடந்த ஆட்சியில் இருந்த திட்டங்கள் எதுவுமே இல்லாமல் போய்விட்டது.
சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு சந்திர முகியாக மாறிவிட்டார். முதல் மந்திரி, முதல் எம்.எல்.ஏ.க்கள் வரை மற்றவர்கள் உடமைகளை தங்களது உடமைகளாக பாவிக்கின்றனர்.
மக்கள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசிற்கு சாதகமாக மாற வேண்டும் என்றால் பொது பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி போராட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






