என் மலர்

  இந்தியா

  உரிய நீரை திறந்து விட வேண்டும்- முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக் குழு கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தல்
  X

  முல்லைப் பெரியாறு அணை ( கோப்பு படம்)

  உரிய நீரை திறந்து விட வேண்டும்- முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக் குழு கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேபி அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தமிழகம் வலியுறுத்தல்.
  • வள்ளக்கடவு வழியாக 5 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும்.

  முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவின் 16-வது கூட்டம் குழுவின் அதன் தலைவர் குல்சன்ராஜ் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, கண்காணிப்புக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கேரள அரசு சார்பிலும் அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

  இந்த கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணையை ஒட்டிய பேபி அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில், பேபி அணையின் கீழ் பகுதியில் இடையூராக உள்ள 15 மரங்களை வெட்டி அகற்ற அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினார்கள்.

  அதைப்போல அணைப்பகுதிக்கு வள்ளக்கடவு வழியாக செல்ல 5 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை கணக்கிட்டு, தமிழகத்துக்கு உரிய நீரை பகிர வேண்டும் என்றும் தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Next Story
  ×