search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதானி குழும விவகாரம்.. வல்லுநர் குழு சொல்வதை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் செபி அறிக்கை தாக்கல்
    X

    அதானி குழும விவகாரம்.. வல்லுநர் குழு சொல்வதை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் செபி அறிக்கை தாக்கல்

    • வல்லுநர் குழு முதல் கட்ட விசாரணை அறிக்கையை மே மாதம் தாக்கல் செய்தது.
    • ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செபி தெரிவித்துள்ளது.

    அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும், அதானி நிறுவனம் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி மோசடியில் ஈடுபட்டதாகவும், அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்திருந்தது.

    இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை மே மாதம் தாக்கல் செய்தது. அதில், அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடி வேலை செய்தற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தது. அதேசமயம், 2014-2019 காலகட்டத்தில் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) செய்த பல திருத்தங்களை மேற்கோள் காட்டி, இது விசாரணை திறனைக் கட்டுப்படுத்தியதாக குறிப்பிட்டிருந்தது.

    இந்நிலையில், அதானி குழும நிறுவனங்கள் மீதான முறைகேடு புகார் குறித்து இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) விசாரணை அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

    அதில், வல்லுநர் குழுவின் அறிக்கையில் உள்ள கருத்துக்களை ஏற்கமுடியாது என்றும், 2019 ஆம் ஆண்டில் செய்த மாற்றங்கள், வெளிநாட்டு நிதிகளின் பயனாளிகளைக் கண்டறிவதை கடினமாக்கவில்லை என்றும் கூறி உள்ளது. ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.

    Next Story
    ×