என் மலர்
இந்தியா

இளம்பெண்ணுக்கு மது ஊற்றி, கழுத்தை நெரித்துக் கொன்ற பயங்கரம்.. உடலை எரித்து ஆற்றில் வீசிய தரகர்
- கொடுத்த 6 லட்ச ரூபாய் பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ள வருமாறு அஞ்சலியிடம் சிவேந்திரா கூறியுள்ளார்.
- அவரது உடலை தீவைத்து எரித்து, பாதி எரிந்த உடலை யமுனை ஆற்றில் வீசியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா பகுதியை சேர்ந்த இளம்பெண் அஞ்சலி (வயது 28). கணவனை இழந்த அஞ்சலிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
அஞ்சலி தான் வசித்துவந்த பகுதியில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். இதற்காக அதேபகுதியை சேர்ந்த சொத்து புரோக்கரான சிவேந்திரா யாதவ் (26) என்பவரிடம் பிளாட் நிலம் வாங்க 6 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.
பணத்தை வாங்கிக்கொண்ட புரோக்கர் சிவேந்திரா நிலத்தின் பத்திரத்தை அஞ்சலியிடம் கொடுக்காமல் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி சிவேந்திராவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், அஞ்சலிக்கும், சிவேந்திராவுக்கு பிரச்சினை ஏற்பட்துள்ளது.
இந்நிலையில், கொடுத்த 6 லட்ச ரூபாய் பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ள வருமாறு கடந்த 7ம் தேதி அஞ்சலியிடம் சிவேந்திரா கூறியுள்ளார்.
அன்றைய தினமே சிவேந்திராவின் வீட்டிற்கு அஞ்சலி சென்றுள்ளார். அங்கு பணத்தை திரும்ப தராமல் சிவேந்திர மற்றும் அவரது கூட்டாளி கௌரவ் (19) அஞ்சலியை தாக்கியுள்ளனர்.
மேலும் அவரை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து, அவர் போதையானதும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின் அவரது உடலை தீவைத்து எரித்து, பாதி எரிந்த உடலை யமுனை ஆற்றில் வீசியுள்ளனர்.
சிவேந்திராவை பார்க்க செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி அன்று இரவுக்குள் வீட்டுக்கு திரும்பி வராதது குறித்து அஞ்சலியின் சகோதரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து மறுநாள் அவர் போலீசில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக சிவேந்திராவிடம் விசாரித்ததில் உண்மை வெளிவந்தது. அஞ்சலியின் உடலை நேற்று (சனிக்கிழமை) ஆற்றின் அருகே மோசமான நிலையில் கண்டெடுத்தனர். இதைத்தொடர்ந்து சிவானந்தா மற்றும அவரது கூட்டாளி கௌரவை போலீசார் கைது செய்தனர்.






