search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெள்ளத்தில் சிக்கிய நாயை, உயிரை பணயம் வைத்து மீட்ட நபர்- டுவிட்டரில் பாராட்டுகள் குவிகிறது
    X

    வெள்ளத்தில் சிக்கிய நாயை, உயிரை பணயம் வைத்து மீட்ட நபர்- டுவிட்டரில் பாராட்டுகள் குவிகிறது

    • வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 300 மில்லி மீட்டருக்கும் மேல் மழை கொட்டித் தீர்த்தது.
    • வீடியோவில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சிக்கிய நாயை மீட்க ஒருவர் சாய்ந்த ஏணி மூலம் இறங்குகிறார்.

    டெல்லி, இமாச்சலபிரதேசம், காஷ்மீர், சண்டிகர் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சண்டிகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 300 மில்லி மீட்டருக்கும் மேல் மழை கொட்டித் தீர்த்தது.

    இதனால் சண்டிகரில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சண்டிகரின் குடா லாகூர் பாலத்தின் கீழ் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நாய் ஒன்றை ஒருவர் உயிரை பணயம் வைத்து போராடி மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சண்டிகர் காவல்துறையால் டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சிக்கிய நாயை மீட்க ஒருவர் சாய்ந்த ஏணி மூலம் இறங்குகிறார்.

    அதன்மூலம் நாயை மீட்ட அவர் அதனை ஒரு கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையில் ஏணிப்படிக்கட்டுகளை பிடித்துக் கொள்கிறார். பாலத்தின் மேல் நிலையில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அவரை வெளியே இழுப்பது போன்று காட்சிகள் உள்ளது. கடந்த 10-ந் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோ 98 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் நாயை மீட்ட நபர் மற்றும் போலீசாரின் முயற்சிகளை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×