search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    97.62 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டன: ரிசர்வ் வங்கி
    X

    97.62 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டன: ரிசர்வ் வங்கி

    • 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நாளில், ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
    • கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, ரூ.8 ஆயிரத்து 470 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து சேரவில்லை.

    மும்பை:

    2,000 ரூபாய் நோட்டுகளை கடந்த ஆண்டு மே 19-ந் தேதி ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கி கணக்கில் செலுத்தலாம் அல்லது வேறு நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. பிறகு இந்த கால அவகாசம் அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நாளில், ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, ரூ.8 ஆயிரத்து 470 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து சேரவில்லை. அதாவது, 97.62 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து விட்டன. .

    அந்த நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நேரடியாக செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். அல்லது, எந்த தபால் நிலையத்திலும் 'இந்தியா போஸ்ட்' மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பி, தங்களது வங்கி கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×