search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: 74.13 சதவீதம் வாக்குப்பதிவு
    X

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: 74.13 சதவீதம் வாக்குப்பதிவு

    • 5 மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.
    • நேற்றுடன் 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நிறைவடைந்துள்ளது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. அங்கு மொத்தமுள்ள 200 தொகுதிகளில் கரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டது.

    இந்தத் தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1,862 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 5.25 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. 199 தொகுதிகளில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டிருந்தன.

    நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். பல்வேறு இடங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது.

    இந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் 74.13 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளன.

    நேற்று பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

    Next Story
    ×