என் மலர்tooltip icon

    இந்தியா

    இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் உள்ளனர்-  பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
    X

    இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் உள்ளனர்- பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில்

    • இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
    • இலங்கை சிறையில் 486, பாகிஸ்தானில் 7, பஹ்ரைனில் 37 தமிழக மீனவர்கள் சிறையில் உள்ளனர்.

    டெல்லியில் பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இங்கு, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதில், இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

    தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் கேள்வி எழுப்பினார்.

    அப்போது, இலங்கை சிறையில் 486, பாகிஸ்தானில் 7, பஹ்ரைனில் 37 தமிழக மீனவர்கள் சிறையில் உள்ளனர் என்று பாராளுமன்றத்தில் வெளியுறவு இணையமைச்சர் கீர்த்திவரதன் சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    அதில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றிருந்தபோது மீனவர் பிரச்சினை குறித்து விவாதித்தார். மீனவர்கள் தொடர்பான கூட்டு பணிக்குழு மூலம் தொடர்ச்சியாக இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×