search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
    X

    27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

    • செலவு கணக்கை தாக்கல் செய்ய தவறும் வேட்பாளர்களுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.
    • தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் கையில் வைத்திருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 27 வேட்பாளர்களின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளது.

    பாராளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதை தாக்கல் செய்ய தவறும் வேட்பாளர்களுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.

    அந்த வகையில் தமிழகத்தில் 2021-ம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளது.

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட செந்தில்குமார், சைதாப்பேட்டை சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட வெங்கடேஷ், விருகம்பாக்கம் தினேஷ்குமார், வேலூர் பன்னீர்செல்வம், நசீர், சங்கரன்கோவில் பாலமுருகேசன், முதுகுளத்தூர் சதீஷ் தேவசித்தம், ராமச்சந்திரன், அழகுமலைகுமரன் உள்ளிட்ட 27 வேட்பாளர்களின் பெயர்களை இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி உள்ளது. இவர்கள் இனி தேர்தலில் போட்டியிட முடியாது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் இந்தப் பட்டியலை அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    Next Story
    ×