search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் மந்திரிசபை விரிவாக்கம் - டெல்லியில் தீவிர ஆலோசனை!
    X

    கர்நாடகாவில் மந்திரிசபை விரிவாக்கம் - டெல்லியில் தீவிர ஆலோசனை!

    • மந்திரிசபையில் 24 இடங்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
    • மூத்த தலைவர்கள் மந்திரிசபையில் இடம்பிடிக்க முனைப்பு காட்டுவதாக தகவல்.

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து இருக்கிறது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்று உள்ளனர். இவர்களுடன் எட்டு மந்திரிகள் பதவியேற்றனர். எனினும், இவர்களுக்கு எந்த துறையும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    மந்திரிசபையில் மீதம் இருக்கும் 24 இடங்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. மூத்த தலைவர்கள் தேஷ்பாண்டே, எச்.கே. பட்டீல் உள்ளிட்டோர் மந்திரிசபையில் இடம்பிடிக்க முனைப்பு காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கிட்டத்தட்ட 45 எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி கேட்பது, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுக்கு மந்திரி பதவி கேட்பது போன்ற காரணங்களால் யார் யாருக்கு மந்திரி பதிவி வழங்குவது என்ற விவகாரத்தில் காங்கிரஸ் மேலிட வட்டாரத்தில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் டெல்லி புறப்பட்டு சென்றனர். இருவரும் கட்சி மேலிடத்திடம் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த வகையில், விரைவில் மந்திரிசபை விரிவாக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×