என் மலர்
இந்தியா

கங்குலி வீட்டில் இரவு உணவு சாப்பிடும் அமித் ஷா
சவுரவ் கங்குலி வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார் அமித்ஷா
மத்திய மந்திரி அமித்ஷாவுக்காக சைவ உணவை தயாரித்ததாக பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்திற்கு சென்றுள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் சவுரவ் கங்குலி வீட்டிற்கு சென்ற அமித்ஷா அவருடன் இரவு உணவு சாப்பிட்டார்.
இது குறித்து கங்குலி தெரிவித்துள்ளதாவது: மத்திய மந்திரி அமித்ஷா 2008ம் ஆண்டில் இருந்தே எனக்கு தெரியும். அவருடைய மகனுடன் பணியாற்றி வருகிறேன்.
எனது வீட்டில் இரவு உணவில் கலந்து கொள்ள வரும்படி அழைத்தேன். அவரும் அதனை ஏற்று கொண்டார். அவருக்காக சைவ உணவை தயார் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக மத்திய கலாசார அமைச்சகம் ஏற்பாடு செய்த கலை நிகழ்ச்சி ஒன்றிலும் அமித்ஷா பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் சவுரவ் கங்குலியின் மனைவி டோனா கங்குலி, தனது தீக்சா மஞ்சரி என்ற குழுவினருடன் சேர்ந்து நடனம் ஆடுகிறார்.
Next Story






