என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    காங்கிரசை வலுப்படுத்த பிரியங்காவின் 3 பரிந்துரைகள்

    பிரியங்கா 3 பரிந்துரைகளை மாநில தலைவர்களிடம் விவாதித்து சோனியாவிடம் அளித்துள்ளார். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த மாற்றங்களை கொண்டுவர அவர் திட்டமிட்டுள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை தழுவியது. 1988ம் ஆண்டுவரை அங்கி ஆட்சி செய்த அங்கு கட்சியால் வெறும் 2 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.

    2012ல் 28 தொகுதிகளில் வெற்றிபெற்று 11.63 சதவீத ஓட்டுகளை பெற்ற காங்கிரசுக்கு உ.பி. தேர்தலில் தற்போது 2.33 சதவீத ஓட்டுகளே கிடைத்தது. அந்த அளவுக்கு காங்கிரசில் பலவீனம் அடைந்து விட்டது.

    அதில் இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச பொறுப்பாளருமான பிரியங்கா வீதி வீதியாக பிரசாரம் செய்தும், பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்தும் எந்த பலனும் இல்லை.

    இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மறு ஆய்வு செய்யவும் பிரியங்கா கட்சி மேலிடத்திடம் 3 பரிந்துரைகளை அளித்துள்ளார். அடிமட்ட அளவில் அமைப்பை வலுப்படுத்த 3 வழிகளை அவர் கட்சி தலைவர் சோனியாவிடம் அளித்துள்ளார்.

    * புதிய புத்துணர்ச்சி ஊட்ட மூத்த தலைவரின் கீழ் மாநில காங்கிரஸ் கமிட்டியை அமைக்க வேண்டும்.

    * மாநில தலைவர் தலைமையின் கீழ் 4 அல்லது 5 செயல் தலைவர்கள் நியமிக்க வேண்டும்.

    * உ.பி. மேற்கு, உ.பி. கிழக்கு, அவாத், புந்தேல்கண்ட் என 4 மண்டலங்களாக பிரித்து தன்னிச்சை குழுக்களை அமைக்க வேண்டும்.

    இந்த 3 பரிந்துரைகளை பிரியங்கா மாநில தலைவர்களிடம் விவாதித்து சோனியாவிடம் அளித்துள்ளார். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த மாற்றங்களை கொண்டுவர பிரியங்கா திட்டமிட்டுள்ளார்.


    Next Story
    ×