என் மலர்

  இந்தியா

  பிரசாந்த் கிஷோர்
  X
  பிரசாந்த் கிஷோர்

  காங்கிரசுக்கு என்னைவிட தலைமையே தேவை- பிரசாந்த் கிஷோர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரசாந்த் கிஷோரின் முயற்சிகள் மற்றும் கட்சிக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளை பாராட்டுவதாக ரன்தீப் சுர்ஜேவாலா கூறி உள்ளார்.
  புதுடெல்லி:

  காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார். பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேரும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  அழைப்பு விடுத்ததாகவும், ஆனால், பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாகவும், காங்கிரஸ் பொதுச்செயலாளா ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். எனினும், அவரது முயற்சிகள் மற்றும் கட்சிக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளை பாராட்டுவதாக ரன்தீப் சுர்ஜேவாலா கூறி உள்ளார்.

  காங்கிரஸ் கட்சியில் சேர மறுத்தது குறித்து, பிரசாந்த் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார். ‘காங்கிரசுக்கு என்னைவிட தலைமையே தேவை’ என்று கூறி உள்ள அவர், காங்கிரசில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு சீர்திருத்தங்கள் மூலம் தீர்வு காண வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

  காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் பிரசாந்த் கிஷோர் அண்மையில் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் கட்சியை சரிவில் இருந்து மீட்டெடுத்து, வரும் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வெற்றி பெறச் செய்வது தொடர்பான வரைவு திட்டங்களை பிரசாந்த் கிஷோர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×